வில்வித்தை, பில்லியர்ட்ஸ், ராக்கெட் பால், ஸ்பீடு ஸ்கேட்டிங், உஷு என 5 வகையான விளையாட்டில், பைனலில் நம்ரதா
உலக விளையாட்டு 12வது சீசன்சீனாவில் நடக்கிறது. இந்தியா சார்பில் 17 பேர்(10 வீரர்,7 வீராங்கனை), வில்வித்தை, பில்லியர்ட்ஸ், ராக்கெட் பால், ஸ்பீடு ஸ்கேட்டிங், உஷு என 5 வகையான விளையாட்டில் பங்கேற்கின்றனர்.
பெண்கள் உஷூ போட்டிக்கான 'சாண்டா'52 கி.கி., பிரிவு அரை யிறுதியில் இந்தியாவின் நம்ரதா பத்ரா, பிலிப்பைன்சின் கிரிசான் பெய்த் கொலாடோ மோதினர். இதில் நம்ரதா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். இம்முறை இந்தியாவுக்கு 2வது பதக்கத்தை உறுதி செய்தார். நம்ரதா, சீனாவின் மெங்யூ சென் இன்று நடக்கும் பைனலில் மோதுகின்றனர்.
0
Leave a Reply